10 ஆம் வகுப்பு போதும்! ரயில்வேயில் வேலை!

Published:

Northern Railway jobs
Northern Railway jobs

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் Apprentice பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணி Apprentice பணிக்கு மொத்தம் 1664 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.7,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

இந்த பணிக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடங்கியது. விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் 01.09.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: Engagemnent of ACT APPRENTICES Zonal Notification No. RRC/NCR/01/2021 Dated 27/07/2021 (rrcpryj.org)

விண்ணப்பிக்கும் இணையதளம்: Official Website Of RRC NCR PRAYAGRAJ, RRC PRAYAGRAJ (rrcpryj.org)

Related articles

Recent articles

spot_img