சிறுவனை முட்டுவதற்கு வந்த மாடு… அதன்பின் நடந்தது என்ன?

Published:

cow
cow

இந்தக் கணம் இருப்பதுபோல் அடுத்தக் கணம் இருப்பதில்லை. கணத்துக்கு கணம் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் பல விபத்துகள் நடந்து விடுகின்றன…. கொடூரங்கள் நடந்து விடுகின்றன.

ஓரொருமுறை கண்ணுக்கு எதிராகவே கண்மூடித் திறக்கும் நேரத்தில் பல ஆபத்துக்கள் நடப்பதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட விபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் கூட துணை இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் எத்தனை பெரிய ஆபத்தாக இருந்தாலும் தப்பித்துக் கொண்டு விடலாம்.

தன் வீட்டின் முன்னால் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சின்னப் பையனுக்கு அத்தகைய அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய விபத்திலிருந்து தப்பித்தான்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தால் அந்த சந்தோஷமே வேறுதான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த சிறுவர்களுக்கு விபத்து என்றால் என்ன… ஆபத்து என்றால் என்ன… அபாயம் என்றால் என்ன… எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது எதுவும் தெரியாத ஒரு வயது. அதனால்தான் அத்தகைய குழந்தைகளை கண்ணை இமை காப்பது போல் பார்க்க வேண்டும். சிறு

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

குழந்தைகள் சைக்கிளில் விளையாடுவதற்கு மிகவும் விரும்புவார்கள். குழந்தைகள் வீட்டு வாசலில் சைக்கிள் விளையாடுகிறார்கள் என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. அந்த சந்தில் பெரிய வாகனங்கள் எதுவும் வராது… குறுகியதாக இருக்கிறது… என்று எண்ணி அந்த சிறுவனை சைக்கிள் ஓட்டிக்கொண்டு விளையாடு என்று பெற்றோரும் விட்டுவிட்டதால் எத்தகைய விபத்து நேர இருந்ததோ… இந்த வீடியோவைப் பார்த்தால் தெரியும்.

ஒரு சிறு பையன் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டிக்கொண்டு வீதியில் செல்கிறான். ஆனால் தன்னை முட்டுவதற்கு வேகமாக வரும் மாட்டை அவன் பார்க்கவில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்த ஒரு பெரியவர் அங்கு நடக்கும் விபத்தைப் பார்த்து விட்டார்.

தன் கையில் பச்சை குழந்தையோடு உள்ள ட்ராலியை விடாமல் பிடித்துக் கொண்டே அந்த மாட்டைத் துரத்தினார். ஆனால் அந்த பொல்லாத மாடு சிறுவனை விட்டுவிட்டு இந்த பெரியவர் கையில் உள்ள ட்ராலியை முட்டுவதற்காக துரத்தியது.

அந்த பச்சை குழந்தை இருந்த ட்ராலியை மாடு முட்டுவதற்கு இடம் கொடுக்காமல் அங்குமிங்குமாக அதனை திருப்பியபடி தப்பித்துக் கொள்வதற்கு அந்த பெரியவர் முயற்சித்தார். அதற்குள் வேறு ஒரு பெண்மணி மறு புறத்தில் இருந்து ஓடிவந்தார். ஆனால் அவரும் கால் வழுக்கி கீழே விழுந்தார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இந்த சத்தங்களையும் கூக்குரல்களையும் கேட்ட மற்றொருவர் ஓட்டமாக ஓடி வந்து அந்த மாட்டைத் துரத்தியடித்ததால் அந்த சிறு குழந்தைகள் இருவருக்கும் எந்த ஒரு ஆபத்தும் நேராமல் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்ததால் யாருக்கும் எப்படிப்பட்ட விபத்தும் நேரமில்லை. இல்லாவிட்டால் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு பெரிய விபத்து நடந்திருக்கும்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த வீடியோவை பார்த்தால் புரியும்..

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img