ரூ.85570/- வரை சம்பளம்.. SPMCIL இல் பணி!

Published:

SPMCIL
SPMCIL

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited) (SPMCIL) என்பது இந்திய அரசின் நிறுவனமாகும்.

மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் செயல்படும் இந்நிறுவனம் பணத் தாள்கள், வங்கி பண முறி தாள்கள் (bank notes), நாணயங்கள், நீதிமன்ற சார்பற்ற வில்லை, அஞ்சல் வில்லைகள் மற்றும் அரசு சார்பான ஆவணத் தாள்களை அச்சிடுகிறது.

இந்திய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் 2006ம் ஆண்டில் துவக்கப்பட்டது. நான்கு காகித அச்சகங்களும், நான்கு நாணயச்சாலைகளும், ஒரு காகித ஆலைகளும் கூடிய ஒன்பது அலகுகளை இக்கழகம் கொண்டுள்ளது.

இங்கு காலியாக உள்ள Secretarial Assistant and Junior Office Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் (SPMCIL)
வேலையின் பெயர் Secretarial Assistant and Junior Office Assistant
காலிப்பணி இடங்கள் 04
தேர்ந்தெடுக்கும் முறை Phase 1 மற்றும் Phase 2 எனும் இரண்டு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது 27.10.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கல்வி தகுதி
Secretarial Assistant குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும் .
Junior Office Assistant விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம் மாதம் ரூ.21540/- முதல் ரூ.85570/- வரை சம்பளம்

விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் SC/ST – ரூ.100/-
Others – ரூ.400/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/13c_47i59-N9zc6HNdtYoKfKOkx8bq30G/view இந்த லிங்கில் சென்று காணவும்.

Related articles

Recent articles

spot_img