கேங்க் வார்: 250 நாய்களைக் கொன்று பழிதீர்த்த குரங்குகள்!

Published:

monkey dog revenge - 2026

மஹாராஷ்டிராவில் உள்ள பீட் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட நாய்களைக் கொன்று குரங்குகள் பழி தீர்த்திருப்பதாகவும், அவற்றின் இரண்டு குரங்குகளைப் பிடித்திருப்பதாகவும் மகாராஷ்டிர வனத்துறையினர் சனிக்கிழமை நேற்று கூறினர். அந்த இரு குரங்குகளும் பத்திரமாக வனப் பகுதியில் விடப்பட்டுள்ளன.

பீட் வனத்துறை அதிகாரி சச்சின் காண்ட் இது குறித்துக் குறிப்பிடுகையில், நாய்களைக் கொன்ற குரங்குகளில் இரண்டை பீட் பகுதியில் உள்ள நாக்பூர் வனத்துறயினர் பிடித்து நாக்பூருக்குக் கொண்டு சென்றனர். பின் அவை வனப்பகுதியில் விடப்பட்டன என்றார்.

monkey dogs - 2026

இது குறித்து மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டம் லவூல் கிராமத்தினர் கூறுகையில், தங்கள் குட்டியைக் கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் 250க்கும் மேலான நாய்களை குரங்குகள் கொன்றுள்ளன என்றனர்.

இந்தப் பகுதியில் ஒரு குரங்குக் குட்டியை சில மாதங்களுக்கு முன் நாய்கள் சேர்ந்து கொன்றுள்ளன. அதற்குப் பழிவாங்குவதற்காக, குரங்குகள் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் இதுவரை 250க்கும் மேலான நாய்க் குட்டிகள், நாய்களைக் கொன்றுள்னன.

விசித்திரமான வகையில், குரங்குகள் அந்த நாய்களை தூக்கிக் கொண்டு , கட்டடம் மற்றும் மரங்களின் உயரமான பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து அவற்றை கீழே வீசி கொன்றிருக்கின்றன.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
monkey dogs3 - 2026

இந்தக் குரங்குகள், கிராமத்தின் சிறார்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளன. இந்தப் பழிவாங்கும் குரங்குகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி வனத்துறையினரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இதை அடுத்து குரங்குகளைப் பிடிக்க களத்தில் இறங்கிய வனத்துறையினர் இரண்டு குரங்குகளைப் பிடித்தனர்…

Related articles

Recent articles

spot_img