இணைய ஆட்சிமுறை மாநாட்டுக்காக பிரதமர் மோடி டுவிட்டரில் உரை

narendramodi சமூக ஊடகம் சமீபத்திய தொழில்நுட்ப முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் 18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டிற்கு டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை. இது போன்ற ஒரு உரை டுவிட்டர் மூலம் நடப்பது இதுவே முதல் முறை. டுவிட்டரில் பிரதமர் எழுதியுள்ளது: “வணக்கம் நண்பர்களே!. டுவிட்டர் மூலம்18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டில் இணைவதை நினைத்து நான் பெருமையடைகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினேன், ஆனால் முடியவில்லை. எனினும், நான் உங்களோடு உரையாடும் வாய்ப்பை தவற விடமாட்டேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் உங்களோடு இணைவது எவ்வாறு என்று நான் சிந்தித்தேன். அப்போது தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஊடகம் மூலம் உங்களுடன் பேச முடிவெடுத்தேன். இந்த மாநாட்டில், மத்திய அரசு, மாநில அரசு, ஆயுதப் படைகள்,  கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் என பல்வேறு துறையின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்கள். மேலும், 12 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்படுகிறது’ என்றும் கோரினார்கள். நான் எல்லா விருது வென்றவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். அவர்களது முயற்சிகளைப் பாராட்டுகிறேன். வெற்றியாளர்களுக்கும்  எனது  வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதோடு  அவர்களின் முயற்சிகளை பாராட்டுகிறேன். குறிப்பாக இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் இணைய ஆட்சிமுறை, திறன் மேம்பாடு,வேலைவாய்ப்பு திறனை மையாமாக கொண்டுள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தியாவை ஒரு கணினி அறிவு பெற்ற சமூகமாகவும் அறிவு சார் பொருளாதாரம் உள்ள நாடுகவும் மாற்ற வேண்டும் என்ற ‘டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் கனவை நினைவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்கும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வலுவான கணினி உள்கட்டமைப்பை உருவாக்க நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.. “டிஜிட்டல் மைய இந்தியா” எனும் கனவு திட்டத்தின் முக்கிய அங்கம் இணைய ஆட்சிமுறை. நம் நாட்டின் ஆட்சிமுறையில் நாம் எவ்வளவு தொழில்நுட்பத்தை கொண்டுவருகிறோமோ அவ்வளவு நல்லது. தொழில்நுட்பம் மற்றும் இணைய ஆட்சிமுறைகள் செயல்முறைகளை எளிமையாக்கும்.நடைமுறை மற்றும் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் பல தடைகளையும் இது தகர்த்தெறியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். . இணைய ஆட்சிமுறையை நாம் பார்க்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது செல்பேசிதான். அதனால் செல்பேசி ஆட்சிமுறைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முடிந்தவரை செல்பேசி மூலம் பல சேவைகளை வழங்கும் வழிகளை கண்டறியும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நமது செல்பேசியில் உலகத்தை கொண்டுவருவோம். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள்தான் நமது முக்கிய சொத்து. அவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் திறன் மேம்பாட்டை அளிப்பது அவசியம். இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு தற்போதுள்ள தொழில்நுட்பமும்  அதன் சிறப்பான பயன்பாடும் அதிகமாக தேவைப்படுகிறது. அதற்குத் தேவையான பணிகளை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவோம். இந்த அனைத்து இந்திய மாநாடு, அடுத்து வரும் ஆண்டுகளில் நமது நாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு புதிய முயற்சிகளை ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று நான் நம்புகிறேன். மாநாட்டில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன். நன்றி!. சமீபத்தில்,  அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்தபோது “சவுண்ட் கிளவுட்” மூலம் “மனதின் குரல்” நிகழ்ச்சியை பிரதமர் பகிர்ந்துகொண்டார். ஜனவரி 28 ஆம் தேதி தேசிய மாணவர் படை அனுவகுப்பில் பிரதமர் ஆற்றிய உரையை அவர் முகநூல் மற்றும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். (தகவல்: பி.ஐ.பி)

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories