உத்தரபிரதேச மாநில அரசு, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் திட்டங்களை ஆய்வு செய்ய 75 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் பகீரிடும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த சிறுபான்மை நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்காமல், எஸ்.சி., மாணவர்களை அந்த இடத்தில் நிரப்பியுள்ளன என்று தெரிய வந்தது. அதன் மூலம், எஸ்.சி., மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையைப் பெற்று ஏமாற்றியிருக்கின்றன. இந்த நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப் குறித்து இப்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சமூக நலத்துறை, உ.பி.,யில் சிறுபான்மையினர் அமைப்புகள் இவ்வாறு மாணவர் சேர்க்கையில் ஒழ்ங்கீனத்தை கடைப்பிடித்து, முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற பல சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதித்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றம் செய்யப்பட்டது நிரூபணம் ஆனால், இந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும்.
பரேலி மற்றும் பதானின் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஜக்மோகன் சிங், இது குறித்துக் குறிப்பிடுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல், கவுன்சிலிங் மேற்கொள்ளப்படாமல் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி உள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை நிதி, அவ்வப்போதைய நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து அமையும். ஆனால் எஸ்.சி. பிரிவில் உள்ள மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கட்டாய நிதி உதவி அதுவும் 100% கிடைக்கும். அதை அவர்கள் பணத்தைக் கட்டி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில சிறுபான்மை நிறுவனங்கள் எஸ்.சி., மாணவர்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் ஸ்காலர்ஷிப் தொகையை இறுதியில் பெற முடியும் என்று கூறி, எஸ்.சி. மாணவர்கள் இடத்தில் 100% அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.
மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் தாமதம் ஏற்படும் போது இந்த வாய்ப்பை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளியில் இந்த நிதி விடுவிக்கப் படும் என்பதால், முதலில், எஸ்சி மாணவர்களிடமிருந்து தங்கள் சொந்தப் பணத்தை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, பின்னர், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் நிதி அந்த மாணவர்களுக்குக் கொடுக்கப் படும் போது, அவற்றை இந்த நிறுவனங்கள் திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால், மத்திய அரசு, இந்த முறைகேட்டை உணர்ந்து கொண்டு, மாணவர்களுக்கு கடந்த 2016-17 ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஸ்காலர்ஷிப் தொகையை போட்டு விடுகிறது. இதனால், சிறுபான்மை நிறுவனங்களுக்குக் கிடைக்கும் முறைகேட்டு நிதி தடுக்கப்பட்டுவிட்டது. இது குறித்து கண்டறியப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லக்னோவில் எஸ்.சி., மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் மோசடி செய்த 10 சிறுபான்மை நிறுவனங்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் உ.பி. அரசு மிகக் கடுமையான நெறிமுறைகளைக் காட்டுவதாலும், மத்திய அரசின் நிதியை முறைகேடாகப் பெற இயலாததாலும், சிறுபான்மை நிறுவனங்கள் கடும் கோபத்தில் உள்ளன.


