கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினி காந்தை, காவிரி பிரச்னையை முன்வைத்தே, கன்னட திரையுலகினர் ப்ளாக்மெயில் செய்து, மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கர்நாடகாவில் ‘காலா’ படத்தைத் திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். அவ்வாறு ரஜினி கூறினார் என்றால், அவரது காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட உதவி செய்வதாக அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசன் பெங்களூரு சென்று, காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியதன் மர்மம் இப்போது விலகிவிட்டது. எத்தகைய அரசியல் பின்னணியில் கமல்ஹாசன் கர்நாடகத்துக்குச் சென்று, இவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்து, அரசியல் தளத்துக்கு வரும் முன்பேயே தமிழர்களுக்கு கமல்ஹாசன் செய்துள்ளது பச்சைத் துரோக அரசியல்தான் என்பது, பளிச்சென தெரிந்துவிட்டது!




