தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

Published:

07 Oct17 dhin Modi - 2026

தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சிங்கப்பூரில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெற்றது. 

ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டுறவின்மூலம் உலகின் அமைதிக்கும் வளத்துக்கும் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளுடன் வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் மோடி பேச்சு நடத்தினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img