ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா! மோடி அதிர்ச்சி!

Published:

urjit patel rbi - 2026

புது தில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மோடி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் வங்கிகளிடம் கெடுபிடி காட்டுவதை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.

ஆனால், அக்.27 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆசாரியா,’ ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்’ என்றார்.

இந்நிலையில், நவ. 19ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டத்துக்குப் பின்னர் ஓரளவு முடிவுக்கு வந்தது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

தற்போது 5 மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா வங்கித்துறைக்கு பேரிழப்பு. வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பொருளாதார சிக்கலின் போது ஆழமான புரிதலை கொண்டவராக இருந்தார். இவர் மிக சிறந்த பொருளாதார நிபுணர். ராஜினாமா . வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர். அவருடன் பணியாற்றிய காலம் மிக இனிதாக இருந்தது. உர்ஜித் படேலை மிஸ் பண்ணுவதாக மோடி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img