சபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’! பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்!

Published:

manju wariar malayala actress - 2026

திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு வாரியர்! அதற்கு அவர் கூறிய காரணம், அரசியல்!

சபரிமலை விவகாரத்தில் மக்களிடம் ஆதரவு திரட்ட ஜனவரி 1ஆம் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கி.மீ., நீளத்திற்கு பெண்களை வரிசையாக நிறுத்தி ‘மகளிர் சுவர்’ அமைக்கப்படும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்திருந்தார்.

manju wariar - 2026

இந்த ‘மகளிர் சுவர்’ நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் தாம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இந்த நிகழ்ச்சி அரசியல் கலப்பு உள்ளதாகத் தெரிவதால், அதில் பங்கேற்க தான் விரும்பவில்லை என்று மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இது குறித்து மஞ்சு வாரியர் விளக்கம் அளித்த போது, நான் எப்போதுமே அரசின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்திருக்கிறேன். அதை நான் எதிர்காலத்திலும் தொடர்வேன். மகளிருக்காகவும் மகளிர் உரிமைக்காகவும் நான் இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகக் கூறினேன். ஆனால், இது எனது இந்த அறிவிப்பு ஒரு அரசியல் விவாதத்துக்கு இட்டுச் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. கலை தான் என் அரசியல். அரசியல் கட்சிகளிடம் இருந்து நான் ஒதுங்கியிருக்கவே விருப்பப் படுகிறேன்… என்று கூறியுள்ளார்.

மகளிர் சுவர் – நிகழ்வு, சபரிமலை விவகாரத்தில் அரசின் மதசார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவும், ஆதரவு திரட்டவும் கேரள கம்யூனிஸ அரசால் நடத்தப் படுகிறது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற கேரள கம்யூனிஸ அரசின் கொள்கையைப் பிரசாரம் செய்யும் இயக்கமாக இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சி அமைந்துள்ளதால், இதில் கலந்து கொள்வதில் பிரபலங்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்போது மஞ்சு வாரியரின் அறிவிப்பு, அடுத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img