இது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்!

இந்தியா லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு
nirmala - 2026

இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத் துறையில் உள்ள காவலர்கள் பிரிவில் பெண்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.