மறுக்கப்பட்ட வாய்ப்புகள்! விரக்தியில் ஓய்வு முடிவினை அறிவித்த அம்பத்தி ராயுடு!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

ambatti rayudu - 2026

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தாம் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு திடீர் அறிவிப்பினை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பெயர் பெற்றவர் அம்பத்தி ராயுடு! சர்வதேச ஒரு நாள் போட்டிகள் 55, டி-20 போட்டிகள் 6 என விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவருக்கு தற்போதைய உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அண்மைக் காலங்களில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட விஜய் சங்கருக்கு உலகக் கோப்பை வாய்ப்பு கிடைத்தது. அதையே பிசிசிஐ தேர்வுக் குழுவும் தெரிவித்தது. ஆனால் அதற்கு அம்பத்தி ராயுடு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சங்கரை 3D வீரர் என்று கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தும் பதிவிட்டிருந்தார்.

அவரது கிண்டல் குறித்து பதிவிட்ட ரசிகர், விஜய் சங்கரை டேக் செய்து, டேய் மச்சான், உன்னைத்தான் கிண்டல் அடிக்கிறாரு போல. ஷங்கி, வேர்ல்ட் கப்ல தூள் பறக்க விடு என்று கூறியிருந்தார். இது போல் இன்னும் கமெண்ட்கள் அதிகம் வந்தன.

இந்நிலையில், காயம் காரணமாக ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினர். அப்போதும் கூட, விஜய் சங்கருக்கு பதிலாக அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நினைத்த அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.