இறந்த குழந்தையை அடக்கம் செய்ய போனவர்கள்! உயிருடன் குழியில் கண்டெடுத்த மற்றொரு சிசு!

Published:

baby 1 - 2026

உத்தர பிரதேச மாநிலம் ஆனா பரேலியில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி தகனம் செய்ய குழி தோன்றிய போது, உயிருடன் ஒரு குழந்தை குழியில் இருந்த சம்வம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நமக்கு கிடைத்த தகவலின் படி, சிபிகஞ்சில் வசிக்கும் ஹிதேஷ் குமாரின் மனைவி வைஷாலி ஒரு பெண் ஆய்வாளர். அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனால் குழந்தை பிறகும் காலத்திற்க்கு முன்கூட்டிய ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

baby - 2026

அந்த குழந்தை சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது. இறந்த பெண் குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தினர் சுடுகாட்டில் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், அருகில் மூன்று அடி ஆழம் உள்ள குழியில், ஒரு குடத்தில் உயிருடன் ஒரு குழந்தை இருந்ததை கண்டார்கள்.

குழந்தை அழுவதைப் பார்த்து, மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அதன்பின்னர் இந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட்டனர்.

Related articles

Recent articles

spot_img