இரண்டு தரப்பினர் மோதல்! தடுத்து நிறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு!

gun

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போசம்பட்டி கிராமத்தில் இரு தரப்பினர் அரிவாள், கட்டைகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில் 14 பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.

மோதலைக் கட்டுப்படுத்த கே.புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு திருச்சி மண்டல டி.ஐ.ஜி., புதுக்கோட்டை எஸ். பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

போசம்பட்டி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே தேர்தல் சம்மந்தமான பிரச்சனை இருந்துள்ளது. அனைவரும் உறவினர்கள் தான் என்றாலும் தேர்தல் இவர்களைப் பிரித்து வைத்துள்ளது.

இந்தப் பிரச்சனை காரணமாக அடிக்கடி உரசல்கள் இருந்துள்ளது. லேசான உரசல்கள் நேற்று பலமான மோதலாக வெடித்துள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ள நிலையில் இன்றும் அதே பிரச்சனைக்காக மறுபடியும் இரு தரப்பினரும் அரிவாள், கட்டைகள், கல் கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.ஐ. சரவணன் மோதலை நிறுத்தச் சொல்லி நீண்ட நேரம் போராடியும் யாரும் கேட்காத நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு மோதிக் கொண்டவர்கள் அமைதியடைந்துள்ளனர். இந்த மோதலிலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 14 பேர்கள் வரை காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தக் கிராமத்தில் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

சம்பவம் குறத்து தகவல் அறிந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி.யும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.

இதைப் போல சில வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் சில சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories