ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி! இளநிலை வருவாய் ஆய்வாளர் நியமன ஆணை!

persi

சாத்தான்குளம் காவல்நிலையில் போலீஸ் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

வேதனையோடு இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீள அரசு வேலை தந்துள்ளது என்று பெர்சி கூறியுள்ளார். நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பெர்சி.

சாத்தான்குளத்தில் செல்போன் கடைவைத்திருந்த ஜெயராஜூம் பென்னிக்ஸ்க்கு லாக்டவுன் விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். தந்தை, மகன் மரணத்திற்கு நீதிகேட்டு தென்மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

உறவினர்களின் போராட்டம் இந்திய அளவில் தெரியவந்தது. காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள், ஏட்டு முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வரை அனைவருமே ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மதுரை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

எதிர்கட்சியினர் இந்த விசயத்தை கையில் எடுக்கவே, விசயத்தின் வீரியத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார்.

உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். எங்களுக்கு வேலையோ பணமோ வேண்டாம், நீதி வேண்டும் என்று கூறினார் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி.

தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார். தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வேலை கொடுத்த அரசுக்கு நன்றி, இருவரை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்துள்ளது. இருவரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories