மனநலம் குன்றிய மகன்! கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
lady susid 2

சிக்பள்ளாபூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி சேர்ந்த ஷோபாராணி(29) என்பவருக்கு திருமணம் ஆகி மகன் விஷால்(7) என்பவன் இருக்கிறான். அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்

.அதனால் சிறுவனின் தாய், அவனை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இருந்தாலும் சிறுவனுக்கு சரியாகவில்லை என்ற காரணத்தால் மனம் உடைந்த அவனின் தாய் ஷோபாராணி, நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த ஷோபாராணி, அவனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாகேபள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதித்த மகனை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.