சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்!

Published:

14 July15 high court
14 July15 high court

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த

1.கண்ணம்மாள் சண்முகசுந்தரம்
2.சத்திகுமார்
3.முரளி சங்கர் குப்புராஜீ
4.மஞ்சுளா ராமராஜு நல்லையா
5.தமிழ்ச்செல்வி
6.சந்திரசேகரன்
7.நக்கீரன்
8.சிவஞானம் வீராசாமி
9.இளங்கோவன் கணேசன்
10.ஆனந்தி சுப்ரமணியன்

இவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,தற்போது ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்..

தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உள்ள நிலையில், இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படும் பட்சத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட
நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள 10 மாவட்ட நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி ஆவர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img