மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஓராண்டாக பாலியலுறவு! இளைஞர் போக்சோவில் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai 1 1

மாணவியை ஓராண்டாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் மேரி (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (27). இவர், மாணவியைக் காதலித்து வந்துள்ளார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார் ஸ்டீபன் ராஜ். ஆனால், மாணவி என்னை திருமணம் செய்து கொண்டால் மற்ற காரியங்களை வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் காதலனின் ஆசைவார்த்தைக்கு மயங்க, செக்ஸ் வைத்து கொள்ள அனுமதித்துள்ளார். இதனால், தனது ஆசையை நிறைவேற்றி கொண்டு உள்ளார் ஸ்டீபன்.

தினந்தோறும் இது தொடர்ந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், காதலனோ, திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியபடியே தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவி மறுக்கவே, ஆத்திரம் அடைந்த காதலன், அவரை மிரட்டியுள்ளார். நமக்குள் இருக்கும் உறவை வெளியில் சொல்லிவிடுவேன் என்று ஸ்டீபன் மிரட்டியுள்ளார். இப்படியே மிரட்டி மிரட்டி ஓராண்டாக மாணவியை பாலியல் உறவில் இருந்ததின் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்தார்.

ஸ்டீபனிடம் தான் கர்ப்பமாய் உள்ளதை கூறியுள்ளார். ஆனால், கருவை கலைத்து விடு என்று காதலன் ஸ்டீபன் சொல்லியதோடு, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து இருக்கிறார்.

இதையடுத்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார் மாணவி. இதனால், மகளை மருத்துவமனைக்கு சோதனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர், உங்கள் மகள் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

உடனே மகளை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஸ்டீபன் ராஜ் மீது ராமநாதபுரம் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர், ஸ்டீபன் ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.