‘உதை’ ட்வீட்டில் ஸ்டாலின் ‘முதல்வர்’; எடப்பாடி ‘எடுபிடி’!

Published:

udhay-tweet-1
udhay-tweet-1

தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார். அதனை தமிழக முதல்வர் செய்கிறார் என்று உதை (உதயநிதி ஸ்டாலின்) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு சமூகத் தளத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் சிலர்.

மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து , தமிழகத்திலும் நேற்று ஊரடங்கு தளர்வு நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில் மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை இயக்குவது, இ-பாஸ் முறை ரத்து செய்யப் படுவது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘ தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் ( மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.’ என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
https://twitter.com/seenivasjeyaraj/status/1300136958878838784

அவரது கருத்துக்கு விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

Related articles

Recent articles

spot_img