melakkal-road-roko
melakkal-road-roko

மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே சாக்கடை மற்றும் குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மேலக்கால் திருமங்கலம் ரோட்டில் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர் .

சாக்கடை நீர் வீட்டுக்குள் பொதுவாகவும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திடீரென திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர் யூனியன் நிர்வாக அதிகாரிகள் வந்து ஒப்புதல் தந்தான் கலைந்து செல்வோம் என்றனர் .

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் நேரமாக அதிகரித்துக் கொண்டது தகவல் அறிந்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending