மதுவிலக்கு பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
SUSIED MAN

சிவகுமார் என்பவர் நாகப்பட்டினம் (நாகை) மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 45. மேலும் இவர் மதுவிலக்கு பிரிவில் நாகையில் காவல்துறையினராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு உடல்நலம் குறைவாக இருந்தால் சில நாட்களாக சிரமப்பட்டு வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இவரது பணியை முடித்து, இவரின் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இவரின் மாமனார் வீடு மயிலாடுதுறையில் உள்ளது. மேலும் அங்கு சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் சிவகுமாருக்கு துர்கா என்னும் மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.