சினிமா பேனரால் மரணம் நிகழ்ந்தால் சினிமாவை நிறுத்தி விடுவீர்களா? சூர்யாவிற்கு பதிலடி தந்த காயத்ரி ரகுராம்!

Published:

gayathri rahuram - 2026

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்துவிட வேண்டுமா? என்று நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர். தமிழகத்தில் சனிக்கிழமையன்று மட்டும் 3 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுயிருந்தார். அந்த அறிக்கையில் நீட் தேர்வுகளை மிக கடுமையாக சாடியிருந்தார் சூர்யா. சூர்யாவின் அறிக்கை குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சூர்யாவின் அறிக்கைக்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம், ரசிகர்கள் பேனர்கள் வைக்கிறார்கள்.

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்துவிட்டால் சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்போமா? எந்த ஒரு லாஜிக்குமே இல்லையே.

suriya

தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார். காய்த்ரி ரகுராமின் இந்த பதிலுக்கு ஆதரவாக, கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தேர்வு எழுத கூட மன உறுதி இல்லாத ஒரு மாணவன் எப்படி நாளைக்கு சாகும் தருவாயில் இருக்கக்கூடிய ஒரு நோயாளியை மன உறுதியோடு போராடி மீட்க முடியும். கடவுளுக்கு அடுத்ததாக மருத்துவரை நாம் பார்க்கிறோம். ஏனென்றால் எமனோடு போராடி உயிரை மீட்டபதால்.. அப்படி இருக்கும் பொழுது வீட்டார்கள் எல்லாம் சுற்றி நின்று அழுது மருத்துவரை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதறும் பொழுது எவ்வளவு மன உறுதியோடு அவர் அந்த உயிரோடு போராடவேண்டும். ரத்தமும் சதையும்அருவருப்பும் அடைந்தால் மருத்துவ சேவையை செய்ய முடியுமா? எவ்வளவு மன உறுதி வேண்டும் எவ்வளவு சகிப்புத்தன்மை வேண்டும் அது எதுவும் இல்லாத ஒரு மாணவனால் எவ்வாறு நாளைக்கு ஒரு மருத்துவராக ஆக இயலும் பணம் கொடுத்து மருத்துவராக வருபவர்கள் நாளை எவ்வாறு ஒரு சேவையை மேற்கொள்வார்கள். நான் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். நீங்கள் சினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்று முயலுவதைப் போல..

சினிமா ஷட்டிங்கில் எத்தனையோ மரணங்கள் நடக்கின்றன விபத்துகள் தற்கொலைகள் கூட நடக்கின்றன. எனக்கு டூப் போட்டு தான் உயிர் போயிற்று என்று ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்களா நானே ரிஸ்க் எடுத்துக் கொள்கிறேன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வேண்டாம் என்று என்றாவது கூறி இருக்கிறீர்களா வினியோகஸ்தர் தயாரிப்பாளரோ நஷ்டம் அடைந்தால் உங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இல்லை அவர்களுக்கு தன்னால் தான் நஷ்டம் என்று ஏதாவது பங்கு செய்து கொடுத்து இருக்கின்றர்களா?

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

சினிமா நடிப்பதற்கும் அரசியல்வாதியாக ஆவதற்கும் படிப்பு ஒன்றும் தேவையில்லை என்று யாரையும் படிக்க வேண்டாம் என்கிறீர்களா எதிர்க்க வேண்டாம் என்கிறீர்களா கல்வி முறையை எதிர்க்கிறீர்கள் தேர்வுமுறை எதிர்க்கிறீர்கள் எல்லோரும் எங்களை போலவே படிக்காமலேயே பணத்தை சம்பாதிக்க வழிவகை சினிமாவும் அரசியலும் இருக்கிறது அடுத்தவரை ஏமாற்றி விடலாம் என்கிறீர்களா எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா அப்புறம் எதற்கு நீங்கள் ஒரு கல்வி அறக்கட்டளை எல்லாம் நடத்துகிறீர்கள்

ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள் நடிகர்கள் சொல்வதை தலைமேற் கொண்டு செய்யக்கூடிய அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மன அழுத்தத்தை குறைக்கும் வழி சொல்லுங்கள் கவுன்சிலிங் நடத்துங்கள் அதற்காக ஒரு வீடியோவை செய்யுங்கள் தங்கள் தலைவன் சொல்லிவிட்டான் என்று மாணவர்கள் எல்லாம் தற்கொலையே நிறுத்திக் கொள்ளட்டும் என கருத்துக்களை நெட்டிசன்களும் தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img