May 10, 2021, 1:53 am Monday
More

  ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை!

  அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

  mohanji-bhagavat
  mohanji-bhagavat

  ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் 1925ம் வருடம் விஜயதசமி நாளில் தொடங்கப் பட்டது. இதனை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் விஜயதசமி நாளில் அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

  இன்று விஜயதசமி நாள். இன்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்க சாலக் (ஆர்எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் ) மோகன் பாவகத் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்தவை….

  வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது,  அவர்களுக்கு தங்குமிடம், உணவுவசதி ஏற்படுத்துவது, நோயாளிகளுக்கு மருத்துவ வசதி மற்றும் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகிப்பது என்று மொத்த சமுதாயமும் ஒன்றிணைந்து பணியாற்றியது 

  பள்ளிகளை திறப்பதற்கும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும், குழந்தைகள் கல்விக் கட்டணம் செலுத்தவும் உதவிகள் செய்ய வேண்டும். இடப்பெயர்வால் பலர் வேலையிழந்துள்ளார்கள். வருமானம் குறைந்துள்ள குடும்பங்களில் தற்கொலை,  குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மனநல ஆலோசனை மற்றும் ஆதரவு அவசியம்.

  நமது சமூக கலாச்சார மரபுக்கு எதிராக செயல்படுபவர்கள், தங்களை ஜனநாயகம், மதசார்பின்மை, அரசியல்சாசனம் ஆகியவற்றின் பாதுகாவலர்கள் என்று மக்களை ஏமாற்றியும், வருகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் இத்தகைய நபர்களின் நடவடிக்கைகளை “grammar of anarchy” என்று குறிப்பிட்டுள்ளார்.

  பொய்யான வாக்குறுதிகள் வழங்கி, பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என அழைக்கப் படுவோர் மனதில் வெறுப்புணர்வை தோற்றுவித்து, நம் நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகிய பன்முகத் தன்மையை சிதைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
  பாரதீயர்களை பாரதத்தில் இருந்து பிரிக்க முடியாது. மக்களை பிரிக்க நடைபெற்ற அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன.

  பாரதத்தின் ஆன்மா என்பது பலவித நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளுதல் என்பது, ஹிந்து கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களின் பிரதிபலிப்பே. சகிப்புத் தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நமது தத்துவத்தை, சுவாமி விவேகானந்தர், ‘அமெரிக்க சகோதர, சகோதரிகளே’ என்று அமெரிக்காவில் வெளிப்படுத்தினார். இதுவே ஹிந்துத்வம் 

  கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், தனது ஸ்வதேசி சமாஜ்  எனும் கட்டுரையில்,  பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு சுய உணர்வு கருத்தை முன்னிறுத்தியுள்ளார். ஸ்ரீஅரவிந்தரும்  தனது உரையில் இதை குறிப்பிட்டுள்ளார். இதுவே ஹிந்துத்வம் .

  நமது செயல்களின் பலன்கள் அனைத்தும்  சுய கோட்பாட்டை மையப் படுத்தியே அமைய வேண்டும், அப்போது தான் பாரதம் சுயசார்புடைய நாடாகும் . உற்பத்தி தளங்கள், உற்பத்தி பணியாளர்கள், உற்பத்தி உரிமை, விற்பனை உரிமை அனைத்தும்  நம்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் 

  நம்முடைய விவசாயத்திற்கு நீண்ட வரலாறு  உண்டு. எனவே புதிய கொள்கைகள் நமது விவசாயிக்கு நவீன வேளாண் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதனை நம்முடைய காலத்தால் பரிசோதித்த நடைமுறையுடன் இணைப்பதற்கான வழிமுறையையும் கற்றுத்தர வல்லதாக இருக்க வேண்டும். 

  நமது விவசாய கொள்கைகளை வடிவமைக்கும்போது நம்முடைய விவசாயிகள் தங்களுடைய விதைகளைசேமிக்கவும், உரங்களையும் உரங்களையும் தாங்களாகவே தயாரிக்கும் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வாங்கவும் தயார்படுத்த வேண்டும். 

  வாரத்தின் ஏதாவது ஒரு நாள் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்து, வீட்டில் செய்த உணவை ஒன்றாக சாப்பிட்டு பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் சகஜமாக உரையாடலாம்.

  சுதேசியின் சாத்தியக் கூறுகளை ஆராய்வதில் “Vocal for local ” ஒரு சிறந்த தொடக்கமாகும். வீட்டில் தோட்டம் வளர்ப்பது, பிற ஜாதி, மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர்களோடு நாம் சகஜமாக பழகுகிறோமா, சமூக நல்லிணக்கத்திற்கு என்ன செய்யலாம், சுற்றுச்சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் போன்றவற்றை குடும்பத்திற்குள் விவாதிக்கலாம்

  சின்ன சின்ன விஷயங்களின் மூலம், ஒற்றுமை, நேர்பட செயல்படுதல், பொறுமை, கட்டுப்பாடு மற்றும் மூல்யங்கள் செறிந்த தனி மனித சுபாவத்தை உருவாக்கலாம். நமது கூட்டு அணுகுமுறையும், சமுதாய கண்ணோட்டமும், ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும்.

  நமது பொருளாதாரம், வேளாண்மை, தொழிலாளர்கள் நலம், உற்பத்தி மற்றும் கல்விக்கொள்கையில் சுயசார்பு நோக்கி செல்லக் கூடிய திசையில் சில சாதகமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

  ஸ்வயம்சேவகர்கள் தன்னலமில்லாமலும் ஈடுபாட்டுடனும் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் அனைவரையும் அவர்களுடன் சேர்ந்து பணி புரிய அழைத்து எனது உரையை முடித்துக் கொள்கிறேன்….

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,171FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »