3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு!

Published:

corona-image-1
corona-image-1

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 3 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது

தமிழகத்தில் இன்று (அக்.25, ஞாயிறு) 2,869 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து,  தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதனால்,  சென்னையில் இதுவரையிலான  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,95,672 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக,  ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,924 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,019 பேர் குரோனா நோயிலிருந்து விடுபட்டு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,67,475 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img