
‘ஆபஸ்தம்ப ரிஷிகள் சொன்னது..!
1 குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது.
2 குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3 குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்
4 குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5 ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6 குருவுக்கு மிக அருகில் அமர கூடாது
7 குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8 குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
9 காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும்.
10 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது.
11 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது.
12 குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது.
13 குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும்.
14 குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம்.
15: குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது.
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது.
16 குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.
17 குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது
18 தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது.
19 தன் குருவை தவிர அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது.
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமதிப்பு செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம்.
20 வாயை திறந்து கொட்டாவி விட கூடாது.
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும்
21. குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது.
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது.
22: குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது
23 குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது
24 குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும்.
25 குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும்.
26 குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும். தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.
- தொகுப்பு: சேகர் வாத்யார், நெல்லை