
சாதாரண ஒரு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெறவே நம் குடும்ப பெண்களுக்கு இவளோ தகுதி இருக்கனும் ன்னா ஒரு மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சருக்கும், நம் தொகுதி MLA//MP களுக்கும் என்னென்ன தகுதி இருக்கணும்
2026ல் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் வேட்பாளருக்கும், MLA/ MP களுக்கும் என்னென்ன தகுதிகள் இருக்கணும் வாங்க பார்க்கலாம்….!!
1) குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பட்டயம்/ பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் அல்லது பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவராக இருக்க வேண்டும்
2) வயது 40-45 க்குள் இருக்க வேண்டும்
3) தாத்தா, தந்தை, மகன் யாரும் அரசியலில் இருந்திருக்க கூடாது
4) வாரிசு அரசியலில் உள்ளவருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை
5) துண்டு சீட்டு இல்லாமல் பேச வேண்டும்
6) இந்திய மொழிகளில் பிரதானமாக பேசக் கூடிய மொழிகளை சரளமாக பேச தெரிந்தவராக இருக்க வேண்டும்
7) சொந்த பயன்பாட்டுக்கு ஒரு கார் அல்லது ஒரு இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்
8) வருடத்திற்கு மின்சாரம் 3600 யூனிட் மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும்
9) ஐந்து ஏக்கர் நிலம் மட்டும் இருக்க வேண்டும்
10) லஞ்சம், ஊழல் செய்து இருக்க கூடாது
11) சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது
12) கூட்டணி கட்சி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டவராக இருக்க வேண்டும்
13) ஒரு வருடத்திற்கு இரண்டரை லட்சம் வருமானம் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்
14) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது
15) எந்த வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது
16) தன் சொந்த பெயரிலோ பினாமி பெயரிலோ மதுபான தொழிற்சாலை இருக்க கூடாது
17) முக்கியமாக ஜாதி, மதங்களை கடந்து அனைத்து மனிதர்களையும் நேசிப்பவராக இருக்க வேண்டும்
சுயாட்சி கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தகுதியை நிர்ணயம் செய்ய முன் வருமா…!
—- இந்திய குடி மகன்