
வெங்காய விலை ஏகத்துக்கு ஏறிப்போய் இருக்கிறது மேலும் வெங்காய வரத்து குறைவாக இருக்கிறது என்ற பல்வேறு செய்திகளுக்கு இடையில் அமைச்சர் காமராஜ் வெங்காயம் குறித்து இத்தகவலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் இருந்து அரசு இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு வெங்காயம் விற்கிறது. கனமழையால் உயர்ந்த வெங்காய விலை என்பது நிரந்தரமானதில்லை எனவும் கூறியுள்ளார்.