
ஐதராபாத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த இரு ரயில்கள் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கச்சிகுடா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலும் புறநகர் ரயிலும் குறைந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதியதால் காயங்களுடன் 30 பயணிகள் உயிர் தப்பினர். சிகிச்சைக்காக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.