புத்தகம் வாங்க பள்ளிக்கு அழைத்த கணித ஆசிரியர்! 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
kovindan
kovindan

ஒன்பதாம் வகுப்பு மாணவியை புத்தகம் வாங்க அழைத்து ஆசிரியர் அத்துமீறிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் இண்டூர் கோழிக்கொட்டாய் பகுதியை சார்ந்த அரசு பள்ளி கணித ஆசிரியர் கோவிந்தன். அங்குள்ள இண்டூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு வந்து புத்தகம் வாங்கிக்கொள்ளுமாறு அழைத்துள்ளார். சிறுமி தனியாக வந்து புத்தகம் வாங்கி செல்ல முடிவெடுத்துள்ளார்.

பள்ளிக்கு சிறுமி தனியாக வந்த நிலையில், சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

ஆசிரியரிடம் இருந்து தப்பிக்க இயலாத சிறுமி, வீட்டிற்கு அழுதபடி சென்று விஷயத்தை கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆசிரியர் கோவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.