சுமித்ரா மகாஜன் நலம்.. ட்வீட்டை நீக்கிய சசி தரூர்!

இந்தியா சற்றுமுன்
sasitharur
sasitharur

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பதிவிட்ட ட்வீட்டால் முன்னாள் சபாநாயகரும், பாஜக பிரமுகருமான சுமித்ரா மகாஜன் காலமானதாக வதந்தி பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வேகமாக பரவுவது நல்ல விஷயங்களை கடந்து வதந்தி மட்டுமே. அதற்கு உதாரணம் தான் இந்த நிகழ்வு. கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், சுமித்ரா மகாஜன் இறந்துவிட்டதாகவும், அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

sasi tharur
sasi tharur

அதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளும், சமூக வலைதள பயனாளர்கள் சிலரும் சுமித்ரா மகாஜன் நலமுடன் இருப்பதை சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சசி தரூர் தவறான பதிவுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சுமித்ரா மகாஜன் காயச்சல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.