இன்று மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் இருந்து 15.00 மணிக்கு கொடியசைவோடு புறப்படும் அன்ட்யோதயா சிறப்பு ரயிலானது அடுத்த நாள் 19.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதேபோல், சென்னை செண்ட்ரலில் இருந்து ஜூன் 6-ம் தேதி புறப்படும் ரயில் ஜூன் 11-ம் தேதி சன்ட்ரகாச்சி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில், சன்ட்ரகாச்சி, காரக்பூர், பாலசூர், பாட்ரக், கட்டாக், குர்தா ரோடு, பிரம்மாபூர், பலாசா, ஸ்ரீகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் சூலூர்பேட்டை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.



