பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இளம் வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் தீம் தகுதி பெற்றுள்ளனர். இளம் வீரர்கள் ஸ்வெரவ், தீம் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது, நடால் உட்பட மற்ற முன்னணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் மிகேலா புஸார்னெஸ்குவை (ரோமானியா) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் அனெட் கோன்ட்டாவெயிட்டை (எஸ்டோனியா) மிக எளிதாக வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் பரபரப்பான 4வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் – மரியா ஷரபோவா (ரஷ்யா) மோதுவது ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.



