கர்நாடக முதல்வருடன் கமல் சந்திப்பு: ‘விஸ்வரூபம் 2’ படம் குறித்து பேசவா?

சினி நியூஸ் சினிமா

kamal kumarasamy1 - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் ரஜினி படத்திற்கு மட்டுமின்றி கமல் படத்திற்கும் தடை விதிப்போம் என்று கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் சினிமா சம்பந்தப்பட்டவை எதையும் முதல்வரிடம் பேச போவதில்லை என்று அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் ‘;காலா’ மற்றும் விஸ்வரூபம் 2′ படங்களுக்கான பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

viswaroopam2 - 2026முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல், ‘தூத்துகுடியில் போராட்டம் செய்தவர்கள் சமூக விரோதிகள் என்றால் தானும் சமூக விரோதிகள் தான் என்று ரஜினியை மறைமுகமாக தாக்கினார். மேலும், திமுக சட்டசபைக்கு மீண்டும் திரும்ப எடுத்த முடிவு சரியானது’ என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.