சிவகார்த்திகேயனுடன் 3வது முறையாக இணைந்த கீர்த்திசுரேஷ்

Published:

siva keerthy - 2026

கோலிவுட் திரையுலகில் குறைந்த காலத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய படத்தின் ஓப்பனிங் வசூல் அஜித், விஜய் படங்களின் ஓப்பனிங் வசூலுக்கு இணையாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

seemarajaa1 - 2026இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் ஒருசில காட்சிகள் மட்டும் நடித்துள்ளார். இவருடைய காட்சி குறித்த படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், ‘ரஜினிமுருகன் மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img