படுக்கைக்கு பெண்களை அழைப்பது எல்லா துறையிலும் உள்ளது: சமந்தா

சினி நியூஸ் சினிமா

samantha2 - 2026படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து கடந்த சில மாதங்களாக பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சினிமாத்துறையை பொருத்தவரையில் ஒருசில கருப்பு ஆடுகள் இருப்பது உண்மைதான் என்றும் அந்த கருப்பு ஆடுகள் தான் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும், அந்த கருப்பு ஆடுகளை இனம்கண்டு ஒதுக்கிவிட்டால் சினிமாத்துறையை விட வேறு நல்ல துறை இருக்க முடியாது என்றும் சமந்தா கூறியுள்ளார். மேலும் சினிமாக்காரர்கள் பலர் நல்ல உள்ளத்துடன் பெண்களை மதிக்க தெரிந்தவர்கள் என்பது தன்னுடைய எட்டு வருட சினிமா வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொண்ட உண்மை என்று சந்தா கூறியுள்ளார்.

பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கி தள்ளிவிட வேண்டும் என்றும் சமந்தா பேட்டி ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.