சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக நடித்திருந்த மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நாயகன் கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படம் ‘தேவராட்டம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா என்பவர் இசையமைக்கவுள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவில் பிரவீன்.கே.எல். படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளார்.