சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருளுக்கு ஜோடியாக… ஹை…. ஹன்சிகா..!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
arulsaravanan - 2026

சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபரான சரவணன் அருள், தன் நிறுவனத்தின் விளம்பரங்களில் பளிச்செனத் தோன்றி சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியில் அதிகம் அடிபடும் பெயராகவும் பிரபலம் அடைந்தார்.

சில மாதங்களாகவே சரவணன் அருள் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அவர் ஹீரோ வேடம் கட்ட போவதாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கு ஜோடியாக நடிக்க பல்வேறு நடிகைகளின் பெயர்களை பட்டியல் போட்டு அலசி எடுத்தனர். ஆனால் இறுதியில் ஹன்சிகா இந்த பட்டியலில் முதலிடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தைக் குறித்து கூறிய போது இது ஒரு ஃபேண்டஸி படம் என்றும் பூமியில் வசிக்கும் மக்களை வேற்று கிரகத்திலிருந்து வந்து காப்பாற்றும் ரட்சகராக சரவணன் அருள் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

saravananarul1 - 2026

ஆக… இன்னும் சில தினங்களில் அஜீத், விஜய் படங்களுக்கு இணையாக பேசப்படும் நபராகப் போகிறார் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி!

முன்னதாக, இவர் நடிக்கப் போகும் படத்துக்கு ஹீரோயின் தேடும் படலத்தில் நயன்தாரா பெயர் முதல் நபராகப் பரிசீலனையில் இருந்தது குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியானது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘அள்ளிக்கோ அள்ளிக்கோ’ அண்ணாச்சி ஒரு நாயகனாக வரப் போகிறார். 30 முதல் 50 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்துக்கு கதாநாயகியாக நடிக்க… நயன்தாராவைக் கேட்கும் பொருட்டு விக்னேஷ் சிவனை அணுகினார்களாம். விக்னேஷ் சிவனும் கொஞ்சமும் டென்சனாகாமல் நயனிடம் தகவலைச் சொல்ல அவரோ ‘10 கோடி சம்பளம். சிங்கிள் பேமெண்ட். ஓ.கே.வான்னு கேளுங்க’ என்று சொல்லி அனுப்ப… சரிதான் என்று அதையும் ஏற்றுக் கொண்டு… நயனை தொடர்பு கொண்டார்களாம்… !

saravananarul - 2026

ஆனால் தாம் ஏதோ விளையாட்டாக சொல்லப் போக… இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நயன் ‘தப்பா எடுத்துக்க வேண்டாம். கைவசம் ஏழெட்டு படம் இருக்கு. அடுத்த படத்துல பாக்கலாம்’என்று நழுவி விட்டாராம்.

இதைத் தொடர்ந்தே ஹிட் லிஸ்டில் அடுத்து இருந்த ஹன்சிகா ஓகே., ஆனாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.