திரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் !

சினி நியூஸ் சினிமா

iswariya 1 - 2026தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. இவர் அடுத்ததாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’  என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் காமெடி திரில்லரான படம். இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.பிக்பாஸ் ஜூலி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். பப்ஜி ங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 2 ல் கடைசி நிமிடத்தில் டைட்டிலை இழந்தவர் ஐஸ்வர்யா தத்தா பிக்பாசுக்கு முன்பு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் பாயும்புலி அச்சாரம் ஆறாது சினம் சத்ரியன் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களில் நடித்தார் நடித்து வெளிவந்த படங்களும் ஓடவில்லை புதிய வாய்ப்புகளும் இல்லை என்கிற நிலையில் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனார்.aiswariya - 2026பிக்பாஸுக்கு பிறகு ஓரளவுக்கு விளம்பரமாகி விட்டதால் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா அலேகா கன்னித்தீவு எனவாய்ப்புக்கள் வரிசைகட்டின.ஆனால் எந்த படமும் வெளிவரவில்லை.vijay - 2026படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுகிறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு.  அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் படம். திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.