அபி சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள மாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர், தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அபி சரவணன் மற்றும் வெண்பா நடித்து வரும் 31ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மாயநதி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இசை அமைத்துள்ளார். இதில் அவர் பெயர் ராஜ பவதாரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தை ராஜ நிலா முகில் நிறுவனம் தயாரித்துள்ளது. தனது தங்கைகாக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார் அவருடன் இயக்குனர் அமீரும் உடன் வந்திருந்தார். விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான அசோக் தியாகராஜன். இவரது சொந்த ஊர் மாயவரம். அதனால், மாயவரத்தில் இருந்து கிளம்பிய நதி என்று சொல்லாம். இக்கதை அப்பா மகள் பாசம் நிறைந்த கதை என்று கூறினார். நான் ஒரு டாக்டர் இந்த சினிமாத்துறை எனக்கு புதிது என்று கூறிய இயக்குனர். டாக்டர் தொழில் என் வேலை ஆனால் சினிமா என் கனவு என்றார்.
விழாவில் பேசிய சக்திவேல் பிலிம் பேக்டரி சக்தி இளையராஜா குடும்பத்தினரை பற்றி பெருமையாக பேசினார். படத்தின் ஹீரோயின் வெண்பா பேசுகையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் பெண் இசை அமைப்பாளர் கிடைத்தது ஒரு ப்ளஸ். கற்றது தமிழ் படத்தில் ஹீரோயின் அஞ்சலியின் ஜீனியர் கதாபாத்திரத்தில் நான் தான் நடித்தேன் என்றார்.
இசை அமைப்பாளர் பவதாரணி பேச மிகவும் தயங்கினார். பின் மைக் பிடித்து அவர் பேச தயாரானா போது, கரண்டு கட் ஆனது அங்கிருந்த அனைவரும் தங்களது போனில் டார்ச் அடித்து காண்பித்து, அவரை பேச அழைத்தனர். அப்போது அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
இயக்குனர் அமீர் பேசுகையில், இப்படி ஒரு இசை குடும்பம் எங்கும் கிடையாது. இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டினார். மேலும், பேசிய அவர், தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்