கொரோனா ஊரடங்காம்! ஆடி மாத கிரிவலம் ரத்து!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
thiruparankundram - 2026

கொரோனா ஊரடங்கு உத்தரவினால்., மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் ஆடி மாத கிரிவல நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முருகனின் அறுபடைவீடுகளின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனாலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஜூலை மாதம் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஆடி மாத பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், ரத்து செய்யப்பட்ட நாளில், பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்கமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.