ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரித்து இபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்..

Published:

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பிய நிலையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து இந்திய சட்ட ஆணையத்திற்கு அதிமுக பதில் அனுப்பியுள்ளது. 

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுகவின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளார்.

1070651 chennai 09 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img