1144116 gokul - 2026

கோவை கோகுல் கொலையில் ஐவர் கைது -தப்பி ஓடிய மேலும் இருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்..

சற்றுமுன் கோவை
1144116 gokul - 2026
கொல்லப்பட்ட சொண்டி கோகுல்‌(22)

கோவை கொலை: தப்பி ஓடிய இருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் இன்று தப்பிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1144223 kovai33 1 - 2026
சுட்டு பிடித்த போலீசார்

இதற்கிடையே கோகுல் உள்பட 5 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் கோர்ட்டுக்கு பின்புறம் கோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் காலை 11 மணியளவில் டீ குடிக்க சென்றனர்.

அப்போது அவர்களை, 4 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென அந்த கும்பல் கோகுலை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். கோகுலும், அவரது நண்பரும், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்கள்.

இருப்பினும், அந்த கும்பல் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கோகுலை வெட்டியது. இதில் அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. உடனே மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். அவரையும் அந்த கும்பல் வெட்டினர்.

இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோகுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

1144116 gokul 1 - 2026

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சிலர் அந்த பகுதியை விட்டு ஓடினார்கள். சிலர் இந்த பயங்கர சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர். ரவுடி குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிதீர்க்க இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதினார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தநிலையில், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ஜோஷ்வா, கவுதம் ஆகிய 2 பேர் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய கவுதம், ஜோஷ்வா ஆகியோர் போலீசார் வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவுதம், ஜோஷ்வா ஆகியோரின் கால்களில் துப்பாகியால் போலீசார் சுட்டு பிடித்தனர்.

கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலையில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சூர்யா (24), வெள்ளலூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (26), சித்தாபுதூர் கவாஸ்கான் (27), உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்று ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்

இந்த நிலையில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்யப்பட்ட கோகுல் காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு தாய் இல்லை. அந்த பெண்ணை காதலர் தினமான இன்று திருமணம் செய்ய கோகுல் திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஜாமீன் கையெழுத்து போட்ட பின்னர், காதலியை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த விவரம் தெரிந்த கும்பல், பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.