vivek - 2026
கடந்த சில நாட்களாக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் கன்னடர்கள் வீட்டு சாம்பார் இனிக்கும் என்றும், கன்னட மக்கள் அன்பானவர் என்றும் நடிகர் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
இது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:  ‘அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம். விரைவில் பூங்காற்று திரும்பும். பொதுவாக கன்னட மக்கள் அன்பானவர்கள். அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும். இது பல நாள் அரசியல். கடினம் கடப்போம்; மனிதம் படைப்போம்’ என பதிவு செய்துள்ளார்.
கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் பிரச்சனை இன்றி ஓட வேண்டும் என்பதற்காக நடிகர்கள் பலர் கர்நாடக மக்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending