உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஹஜ் மானியத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: ராம.கோபாலன்

Published:

rama gopalan - 2026

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.

நேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.

ஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டு தான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.

மூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர் களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இது போன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.

சிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… – என்று கோரியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img