கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் வீர்ர்களுக்கு ஊக்கமளிக்க ஆலோசகராக இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருடன் இணைந்து, வீரர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார் மேலும் அணித்தேர்வு ஆகிய விவகாரங்களிலும் சேவாக் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

