கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்

Published:

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ரீவா சோலங்கி என்பவரை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. ஜடேஜாவுக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து இந்த நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அதில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்கின்றனர். இந்தத் தகவலை ஜடேஜாவின் மூத்த சகோதரியான நைனா ஜடேஜா உறுதிப்படுத்தியுள்ளார்.  மெக்கானிக்கல் என்ஜினீயரான ரீவா சோலங்கி, தற்போது மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். சோலங்கியின் தாய் பிரஃபுல்லா சோலங்கி, ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவருடைய தந்தை தொழில் அதிபர் ஆவார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img