காதலுக்கு தடை சொன்ன அம்மாவை பாடையில் கட்டிய மகள் .!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் புகார் பெட்டி
marder 4 - 2026

தெலங்கானா மாநிலத்தில் தனது மகளின் காதலுக்கு குறுகே நின்ற தாயை மகளும் அவருடைய காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

ஹைதரபாத் ஹயாத் நகரைச் சேர்ந்தவர் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)எனும் கல்லூரி மாணவி.

இவர் தன்னுடைய பெற்றோரோடு வசித்து வருகிறார். சாந்தினிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஷி எனும் இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவா் காதலித்து வந்துள்ளனா்.

கல்லூரி மாணவர்களான அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனா்.

amma martedr - 2026

இதை அறிந்த சாந்தினியின் தாய் அவரைக் கண்டித்து சஷியை சந்திக்கக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார்.

தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த தாய் மீது கோபமான சாந்தினி தனது தாயைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தனது தந்தை வெளியூருக்கு சென்ற நாள் பார்த்து காதலனை வீட்டுக்கு வரவழைத்து கழுத்தை நெறித்து தாயைக் கொலை செய்துள்ளார்.

அதன் பின் மூன்று நாட்கள் அந்த பிணத்தோடு அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

dead bady 1 - 2026

பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும் அந்த உடலை அருகில் உள்ள ரயில்தண்டவாளத்திற்கு அருகில் வீசியுள்ளனர்.

அதன் பின் எதுவும் நடக்காதது போல இருந்துள்ளனர்.

criam 8 - 2026

ஆனால் வெளியூர் சென்ற தந்தை வீட்டுக்கு வந்த போது தனது மனைவியைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலிஸார் நடத்திய விசாரணையில் சாந்தினியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.