கார்த்தியின் பணபலம்தான் சவாலாக உள்ளது: ஹெச்.ராஜா!

Published:

h raja - 2026

கார்த்தி சிதம்பரத்தின் பணபலம்தான் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார் பாஜக., சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் பிரசாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய ஹெச். ராஜா காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளனர். அவரது பணபலம் தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறினார்

ஏழு எட்டு முறைக்கு மேல் ஐயோ என்னை கைது செய்யாதே… ஐயோ என்னை கைது செய்யாதே என்று ஒவ்வொரு நீதிமன்றமாக போய் வாய்தா வாங்கி கொண்டிருப்பவர்கள் தொகுதிக்கு என்ன சேவை செய்ய முடியும்?

தொகுதியில் அவர்களது பணபலம் எனக்கு சவாலாக இருக்கலாம் ஆனால் என்றுமே விவேகானந்தர் சொல்வது போல் பண பலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை மனித வளத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே எதுவும் எங்களுக்கு சவால் இல்லை! நிச்சயமாக  சிவகங்கையில் வெற்றி பெறுவேன் என்று கூறினார் ஹெச்.ராஜா!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img