சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: வடமாநில பயங்கரவாதி கைது!

Published:

chennai central railway station - 2026

இலங்கை தொடா் வெடிகுண்டுகளைத் தொடா்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிகம் பேர் வந்து செல்லும் நாட்டின் நுழைவாயிலான சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பயணிகளின் உடைமைகள் நன்கு பரிசோதிக்கப் பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டினரையும் குறிவைத்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடா் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் நடத்தப் படப் போகும் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தது இந்திய உளவுத் துறை! தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் கைதான ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் மூலம் உளவுத் தகவல்களை அறிந்து, இலங்கைக்கும் கொடுத்தது.

இதனால் இந்தியாவின் தென்பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடும் என்று சந்தேகிக்கப் படுவதால், கடற்கரையோர புனிதத் தலங்கள், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

சென்னை எழும்பூா் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றன. ஆபரேஷன் ஸ்டிரோமிங் என்ற இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினா், ரயில்வே காவல் துறையினா் இணைந்துள்ளனர்.

இதனிடையே, வடமாநிலத்தில் இருந்த தப்பி வந்த தீவிரவாதி ஒருவர் சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார். வடமாநில போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தமிழக போலீசார் சுற்றிவளைத்து தீவிரவாதியை பிடித்தனர்! கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img