ஸ்டாலின் உளறல்… வேட்பாளர் திணறல்… மக்கள் கதறல்…!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin senthilbalaji - 2026

எண்பத்து ஆறும் ஒன்பதும் கூட்டினால் எவ்வளவு வரும்…? எலிமெண்ட்ரி ஸ்கூல் மாணவர் என்றால் 95 வரும். ஆனால் திராவிடப் பள்ளியில் பயின்ற ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் கிரேஸ் 2 கூட்டி,  97 வரும். இப்படித்தான் ஆகியிருக்கிறது ஸ்டாலினின் கணக்கு!

சட்டமன்றத்துக்கு செல்வதற்காக சிலர் கணக்கு போடுவார்கள். முதலமைச்சர் ஆவதற்காக சிலர் கணக்குப் போடுவார்கள். சிலர் கணக்குப் போட்டே காய் நகர்த்துவார்கள். ஆனால், போடும் கணக்கே தப்புத் தப்பாகப் போட்டால்… கணக்குப் போடுவதும் தப்பாகவே போய்விடுமே!

அப்படித்தான் தப்பாகிப் போயிருக்கிறது திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு! முதலமைச்சர் நாற்காலியை மட்டுமே சிந்தித்துக் கொண்டு,வாயில் வந்தபடி எல்லாம் உளறிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மத்தியில் மைக் பிடித்து, கணக்குச் சொல்லி… கூட்டி, கூட்டி… எப்படியோ ஒரு விடையைக் கொண்டு வந்து விட்டார்.! ஓர் ஆச்சரியம் இந்தக் கூட்டல் கணக்கைக் கூட, கைகுவித்து கேட்டுக் கொண்டிருக்கும் வேட்பாளர் செந்தில் பாலாஜி, சட்டை செய்யாமல் அல்லது விடை தெரியாமல் அதை சரி செய்யவும் வழியின்றி நிற்கின்றார்.

அண்மைய தேர்தல் பிரசாரத்தின் போது, மு.க.ஸ்டாலின் திமுக., உறுப்பினர்கள் எண்ணிக்கை 87 என்றும், கருணாநிதி மறைவால் ஒன்று குறைந்து 86 என்றும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர் 8, முஸ்லிம் லீக் 1 ஆக… ஆக… மொத்தம் 97 பேர் என்றும் கூறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் ஸ்டாலின் இதே கணக்கைச் சொல்லி, 107 பேர்  திமுக.,வுக்கு உள்ளனர் என்று கூறியிருந்தார். அவரது கணக்கு தவறு என்று பலரும் எடுத்துக் கூறிய பின்னர், தற்போது மீண்டும் அதே கணக்கை தவறாகப் போட்டு, 97 பேர் என்று கூறியுள்ளார். அவரது பேச்சு இப்போது வைரலாகிவருகிறது.

 

1 thought on “ஸ்டாலின் உளறல்… வேட்பாளர் திணறல்… மக்கள் கதறல்…!”

  1. சுடலை ஒரு வெத்துவேட்டு, இவனை எல்லாம் ஒரு alu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.